tamilnadu

கோவில் நிதி மக்களுக்கு பயன்படுத்தப்படும்

உடுமலை, ஜூன் 25-  உடுமலையில் உள்ள திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட் டபிள் டிரஸ்ட் சார்பில் ரூ.6  கோடி மதிப்பில் கட்டப் பட்ட உடுமலை வேங்க டேசப் பெருமாள் திருக் கோவில்  கும்பாபிஷேகம் வரும் ஜீலை 4ஆம் தேதி  நடைபெறுகிறது. இதை யொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  இச்சந்திப்பில் அறக் கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது, உடுமலை மூணாறு சாலையில், செங் குளம் அருகே ஒரு ஏக்கர்  பரப்பளவில்  சுமார் ரூ.6 கோடி மதிப்பில் வேங்க டேசப் பெருமாள் திருக் கோவில்  கட்டப்பட்டு வரு கிறது. இக்கோவில் வரும் ஜூலை 4ஆம் தேதி தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இந்த கோவில் மூலம் வரும் நிதிகள் அனைத்தும் பொது மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு பயன் படுத்தப்படும். மேலும் இந்த கோவில் அனைத்து சமுதாய மக் களும் வழிபடும் பொது கோவிலாகும். வரும் 30ஆம்   தேதி முதல் தினந்தோறும் விழாவிற்கு 30 ஆயிரம்  மக்கள் கலந்து கொள் வார்கள் என எதிர்ப்பார் பதாக தெரிவித்தனர்.