tamilnadu

img

சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு சம்பளத்துடன் விடுப்பு... 

தூத்தூக்குடி
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வியாபாரிகளின் லாக் அப் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தென் மண்டல புதிய ஐஜி-யாக பொறுப்பேற்றுள்ள முருகன் தூத்துக்குடிக்கு ஆய்வுக்கு சென்ற பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில்," சாத்தான்குளம் தலைமை பெண்காவலர் ரேவதிக்கு சம்பளத்துடன் ஒருமாத விடுப்பு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்திற்கு சிபிசிஐடி போலீசாருக்கு உள்ளூர் போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். லாக் அப் மரணங்கள் நடைபெற கூடாது என்பதே காவல்துறையின் விருப்பம். தொடர் பயிற்சியின் மூலம் லாக் அப் மரணங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். முதலமைச்சர் சாத்தான்குளம் வருவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும் காவலர் நண்பர்கள் குழுவினர் வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.காவல்நிலையங்களில் பதிவேடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம்" என கூறினார்.