தூத்துக்குடி:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டக் கிளையின் சார்பாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 95 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையிலும் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கமல வாசன், உறைவிட மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் சனிக்கிழமை நடைபெற்றது.
பணியாளர்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள அரிசி பருப்பு, மசாலா பொருட்களும் மற்றும் ரூபாய் 200 மதிப்புள்ள மாஸ்க்கும் வழங்கப்பட்டது. கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 7 பணியாளர்களுக்கும் நிவாரண பொருட்கள் மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது.