tamilnadu

img

விளாத்திகுளம் பகுதியில் மழையால் பாதித்த விவசாய நிலங்கள்....

தூத்துக்குடி:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திங்களன்று பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் கடந்தசில தினங்களாக பெய்த கடுமையான மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கனிமொழி எம்பி திங்களன்று பார்வையிட்டார். தூத்துக்குடி வடக்குமாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உட்பட பலர் உடன் சென்றனர்.