தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒருவாரத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் தொடங்கும் என தெரிகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழு புதன் மாலை மீண்டும் ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி ஸ்டெர்லைட் ஆலை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனை வரவேற்கிறோம். தொடர்ந்து உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.