தூத்துக்குடி:
கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால் அவர் களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மருத்துவ கழகத்திற்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் ஆக்சிஜன் எந்த பகுதிக்கு அதிகமாக தேவை? என்பதை அறிந்து அந்த பகுதிக்கு அனுப்பி வைக் கிறார்கள். அதன்படி செவ்வாயன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு டேங்கர் லாரியில் 5½ டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.