tamilnadu

img

விவசாயிகள் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறுக... தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
விவசாயிகள், தொழிலாளர்கள், மக்கள் விரோத சட்டங்களை மத்திய- மாநில அரசுகள் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஜோதி தலைமை தாங்கினார். ஏஐடியூசி தாலுகா செயலாளர் குணசீலன், எல்பிஎப் செயலாளர் சுப்பையா, ஏஐஐசிடியு சண்முக பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் லோகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐஎன்டியுசி முருகன் முன்னிலை வகித்தார். சு.பன்னிர்செல்வம், வி.தொ.ச க.சங்கரேஸ்வரன், CITU கார்த்திகேயன், AITUC மாரியப்பன் ஆகியோர் பேசினர். பெ.கணேசன் வங்கிஊழியர் சங்கம், திருக்களத்தி DCW, ஸ்டான்லி கட்டுமானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை
வண்ணார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்பு செயலாளர் அ.தர்மன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், மாநில குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், போக்குவரத்து சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி, சிஐடியு நிர்வாகிகள் எம்.சுடலைராஜ், சி.மணி, ஆர்.முருகன், தொ.மு.ச சார்பில் நிர்வாகிகள்  மகாவிஷ்ணு, முருகன், முருகேசன், ஏ.ஐ.டி.யு.சி சார்பில் நிர்வாகிகள் காசிவிஸ்வநாதன், பாலகிருஷ்ணன், உலகநாதன், எச்.எம்.எஸ். சார்பில் சுப்பிரமணியன், தென்கரை மகாராஜன், மனோகரன், ஐஎன்டியூசி சார்பில் கண்ணன், உமாபதி சிவன், ராமசாமி டிடிஎஸ்.எப் சார்பில் சந்தானம்,ராஜாஜி பேச்சிமுத்து, ஏஐடி.யு.சி. சார்பில் சுந்தர்ராஜ், கணேசன் ரவி டேனியல்  உள்ளிட்டோர் பேசினார். மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி சிதம்பரம் நகர் ஆர்ப்பாட்டம், சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல், ஐஎன்டியூசி கதிர்வேல், ஏஐடியுசி பாலசிங்கம் துறைமுகம் சத்யா ஏஐசிசிடியூ ரவீந்திரன் எஸ்எம்எஸ் சிவராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் பேச்சிமுத்து மாவட்டக்குழு உறுப்பினர்கள் காசி, பெருமாள், குமாரவேல், முருகன், தெர்மல் அப்பாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாசரேத்தில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மாணிக்கம், எழுத்தாளர் ஆறுமுகப் பெருமாள், கட்டுமானச் சங்க தலைவர் டேவிட், உதவி செயலாளர் சுந்தரம், ஆட்டோ சங்கத் தலைவர் ஞானசேகர் இஸ்ரவேல், காமராஜர் ஆட்டோ சங்கதுணைத் தலைவர் கிருஷ்ணகுமார், உத்திரகுமார், பாலன், சிஐடியு மாவட்ட உதவி தலைவர் குமரகுருபரன், வட்டார கன்வீனர் லட்சுமணன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தொமுச நகரதிமுக செயலாளர் ரவி, அலெக்ஸ் புருட்டோ, காந்தி, கருத்தையா, பெஸ்டின்குமார், விடுதலை சிறுத்தைகள் சார்பாக திருவள்ளுவன், பாஸ்கரதாஸ், சங்கர், காங்கிரஸ் சார்பாக சந்திரன், ஜெயக்குமார், மதிமுக சார்பாக பாபு கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்: 
ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், எஐடியுசி மாவட்ட துணை தலைவர் ஸ்ரீகுமார், எஐசிசிடியு மாநில துணை செயலாளர் எஸ்.எம்.அந்தோணி முத்து, தொமுசமாநில துணை செயலாளர் இளங்கோ, எச்எம்எஸ்மாநில அமைப்பு செயலாளர் முத்துக்கருப்பன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், எம்எல்எப் மாநில செயலாளர் சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலகுழு உறுப்பினர்கள் எஸ்.அந்தோணி, கே.பி.பெருமாள், ஐஎன்டியுசி நிர்வாகி ஆல்பர்ட், தொமுச நிர்வாகி சந்திரசேகர், எஐசிசிடியு நிர்வாகி ரமேஷ், எச்எம்எஸ் நிர்வாகிகுமாரசுவாமி உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குழித்துறை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி மாவட்ட துணை தலைவர் ஆமோஸ்,எச்எம்எஸ் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், எஐடியுசி மாவட்ட தலைவர் துரைராஜ், தொமுச மாவட்ட தலைவர் ஞானதாஸ் ஆகியோர் பேசினர். அனைத்து சங்க நிர்வாகிகள் ஜான், றாபி, வின்சென்ட், சுரேஷ், ஸ்டான்லி கலந்து கொண்டனர்.