கி.ரா. என்றழைக்கப்பட்ட கி.ராஜநாராயணன் கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த அற்புத எழுத்தாளர். இவர் 1922 செப்டம்பர் 16 அன்று பிறந்தார். கி.ரா. இயல்பில் ஒரு விவசாயி. ஒருதேர்ந்த கதை சொல்லி. ‘நான்மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொண்ட கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதிஉருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ்இலக்கியத் தோட்டத்தின் 2016ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர் இவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. இவர் எழுத்தாளராக மட்டுமில்லாமல் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காகக் களப்போராளியாகத் திகழ்ந்தவரும் கூட.இவர் தமது 99ஆவது வயதில் 2021 மே 17 ஆம் நாள் புதுச்சேரி லாஸ்பேட்டையில் காலமானார். இவர் அரசு மரியாதையுடன் பிறந்த ஊரான இடைசெவலில் அடக்கம்செய்யப்பட்டார்.
பெரணமல்லூர் சேகரன்