தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுகத்தில் புதனன்று முழுமையான வேலை நிறுத்தம் நடைபெற்றது.ஜனவரி 8 காலை 5 மணிக்கு முதல் சிப்ட் பணியில் இருந்து வேலைநிறுத்தம் தொடங்கியது. சரக்கு கையாளும் பிரிவு தொழிலாளர்கள், மெரைன் பிரிவு ஊழியர்கள், இயந்திர இயக்கம்மற்றும் பராமரிப்பு பணியாளர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிகளை புறக்கணித்தனர். மிகப்பெரும் பாலான அலுவலக பணியாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும், கப்பல்
நிறுவன ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
துறைமுக கால்பாயிண்டில் மூன்றுசிப்ட்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், காலை 10 மணிக்கு துறைமுக கிரீன் கேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து முழக்கம் எழுப்பினர்.தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும். துறைமுகமருத்துவமனைகளை தனியார்மய மாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.வேலை நிறுத்தத்தின் காரணமாக சரக்கு கையாளும் பணிகள் உட்பட துறைமுகபணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தது.மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பின் பேரில் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கான அறிவிக்கையை தூத்துக்குடி துறைமுகத்தில் செயல்படும் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு, போர்ட் எம்பிளாயீஸ் டிரேட் யூனியன் ஐஎன்டியுசி, போர்ட் மெரைனர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஹெச்எம்எஸ், நேசனல் ஹார்பர்ஒர்க்கர்ஸ் யூனியன் ஐஎன்டியுசி, வஉசி போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஏஐடியுசி, போர்ட் ஜெனரல் ஸ்டாப்யூனியன், ஐஎன்டியுசி, போர்ட் அண்ணா டாக் அன்ட் டிரான்ஸ்போர்ட்ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய சங்கங் கள் கடந்த டிசம்பர் 23 அன்று அளித்திருந்தன.