கும்பகோணம், ஏப்.24-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்மற்றும் கும்பகோணம் பாரதி புத்தகாலயம் சார்பில் கும்பகோணம் ரயில் அடி எதிரில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.கும்பகோணம் நகரச் செயலாளர் அசோக்குமார் தலைமைவகித்தார். புத்தகமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் விஜயகுமார், ‘செள்ளு’ புத்தகத்தை அறிமுகம் செய்து ச.நா.தமிழ்ச்செல்வி சிறப்புரை ஆற்றினார்.மாவட்டத் தலைவர் ஜீவபாரதி, நகரத் தலைவர் அனந்தசயனன், கவிஞர் ராஜராஜன், இதயராஜா, சேதுராமன், பக்கிரிசாமி, பழ.அன்புமணி, ஆர்.மனோகரன், சின்னை. பாண்டியன்,சங்கர் உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர்.கும்பகோணம் நகரில் உலக புத்தக தின சிறப்பு நிகழ்வாகஒரு வாரம் தொடர்ந்து பாரதி புத்தகாலயத்தில் புத்தக அறிமுக கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.