திருச்சிராப்பள்ளி, ஜூன் 22- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா, மாவட்ட தலைவர் லிங்கராணி ஆகியோர் அளித்த மனுவில், மாவட்டத்தில் 1000-த்திற் கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. குழு பெண்கள் ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் இருக்கின்றனர். இதில் கடுமையான மன உளைச்சளோடு தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு கடனை வசூலிக்கும் நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடு உள்ளது. வங்கி கணக்கையும், ஆதார் அட்டையும் லாக் செய்து விடுவோம் என்று மிரட்டலும் விடு கின்றனர். ஆகவே சுயஉதவிக்குழுவின் பெண்கள் நலம் மற்றும் பாதுகாப்பு கருதி நுண் நிதி நிறுவனங்களை வசூலை தடை செய்வதோடு, குழுக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்டவை மனுவில் தெரிவித்திருந்தனர். இதே போல் மார்க்சிஸ்ட் கட்சியின் அபி ஷேகபுரம் இடைக்கமிட்டிச் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் அகிலாண்டேஸ் வரி குழு தலைவி பூபதி, ஆட்சியர் அலுவல கத்தில் அளித்த மனுவில், எங்களது குழுவில் 100க்கும் மேற்பட்டோர் உள்ளோம். சுயஉத விக்குழுக்கள் கடன் தொகையை கட்டச் சொல்லி துன்புறுத்தும் நிலை உள்ளது. எனவே சுயஉதவிக்குழு கடன் தொகையை 6 மாத காலத்திற்கு பின் செலுத்த கால அவகா சம் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை மனுவில் தெரி வித்திருந்தனர். சிபிஎம் கிளை செயலாளர் கள் சிவா, ரவி, வாலிபர் சங்க அருணாச்ச லம் மற்றும் அகிலாண்டேஸ்வரி குழு உறுப் பினர்கள் உடனிருந்தனர்.