tamilnadu

img

சுய உதவிக் குழு மகளிரின் கடனை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன் 1- மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்  கும்பகோணம் சிங்காரம் தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க நகரத் தலைவர் செ.சுமதி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஜோதி, சங்க நகரக்குழு ஆர்.உமா மகேஷவரி, இந்திய மாணவர் சங்க காயத்திரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி: இதே போல் நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர், திருவிடைக்கழி, இலுப்பூர், டி.மணல்மேடு, திருவிளையாட்டம், நரசிங்கநத்தம் ஆகிய இடங்களில் மாதர் சங்கம் சார்பில் வட்டச் செயலாளர் ஆர்.ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.