tamilnadu

img

மின்வாரிய மறுசீரமைப்பை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- மறுசீரமைப்பு என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனமான மின்து றையை சிறுசிறு துண்டுகளாக்கி ஆட்குறைப்பு செய்து இதுவ ரையில் பெற்று வரும் சம்பளம், பதவி உயர்வு, சரண்டர் பணப்பயன், ஓய்வூ தியம் உள்ளிட்ட பலன்களுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். 90,000 பென்சன்தாரர்கள், 80,000 பணியில் இருக்கும் மின் ஊழி யர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்ற பணபயன்களை தொடர்ந்து வழங்கிட உத்தரவாதம் அளிக்க வேண்டும். 1.12.19 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொழிற்சங்கங்களை அழைத்து உட னடியாக பேசி முடிக்க வேண்டும். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சலுகைகளை உடனடியாக பறிக்கும்  மறுசீரமைப்பிற்கான வாரிய ஆலோச னைகளை கைவிட வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்ச ங்க கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொமுச மாநில துணைத்தலை வர் மலையாண்டி தலைமை வகி த்தார். விளக்கி தமிழ்நாடு மின்ஊழி யர் மத்திய அமைப்பு மாநில துணை த்தலைவர் ரெங்கராஜன், வட்டச் செய லாளர் செல்வராஜ்,  டிஎன்பிஇஓ மாநில துணைச் செயலாளர் இருதய ராஜ், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன், டாக்டர் அம்பேத்கர் பணி யாளர் பொறியாளர் அமைப்பு வட்டத்தலைவர் பாஸ்கர், தொ. மு.ச.வட்டத்தலைவர் இளங்கோ, எம்ப்ளாயீஸ் பெடரேசன் சிவசெ ல்வம், பொறியாளர் கழக வட்ட செய லாளர் சந்தானகிருஷ்ணன், பொறியா ளர் சங்க வட்டத்தலைவர் பாலாஜி, ஒய்வுபெற்றோர் நலசங்க கிருஷ்ண மூர்த்தி, நிர்வாக பணியாளர் சங்க தலைவர் பாண்டியன் ஆகியோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழி ற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.