திருச்சி,மார்ச்.22- திருச்சி - சென்னை சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
ரமலான் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க மார்ச் 29, 30, 31 ஆகிய நாட்களுக்கு திருச்சி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.