tamilnadu

img

கஜா புயல் தாண்டவத்திற்கு பின் செழிக்கும் மரங்கள்: மீண்டும் பசுமை மீட்டெடுப்பு

தஞ்சாவூர் நவ.12- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகத்தால் நடப் பட்ட மரக்கன்றுகள் செழித்து வளர்ந்து வருகிறது.  கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, கொரட்டூர் அருகில் உள்ள பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் செம்மரம், ஆப்பி ரிக்கன் தேக்கு, வேம்பு, கோங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயிரம் மரக்கன்று நடப்பட்டது. அவற்றிற்கு கூண்டு, வேலி அமைத்து தண்ணீர் விட்டு பராமரிக் கப்பட்டு வந்தது.  மரக்கன்றுகள் செழித்து வளர்ந்த 6 மாதங்களைக் கடந்த நிலையில், கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் மரக்கன்று கடுமையாக பாதிக்கப் பட்டது. இதையடுத்து பேரூராட்சி ஊழி யர்கள் முழுவதும் சேதமடைந்த மரக் கன்றுகளை மீண்டும் நட்டு, கவாத்து செய்து பராமரிப்பு செய்தனர். ஓராண்டு கழிந்த நிலையில் தற்போது மரக்கன்றுகள் செழித்து வளர்ந்துள்ளன. 

இதே போல், நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சில மாதங்களுக்கு முன்பு, பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும், தனியார் பங்களிப்புடன் 10 ஆயிரம் மரக் கன்று நடப்பட்டு வருகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்று கள் பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணி மொழியன், தலைமை எழுத்தர் வி.சிவ லிங்கம் மேற்பார்வையில் பள்ளிகள், சாலை யோரங்கள், பொது இடங்கள், கடைவீதி, தனியார் வீடுகள் ஆகியவற்றில் தனியார் பங்களிப்புடன் நடப்பட்டது. தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக மரக் கன்றுகள் நன்றாக துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. பேரூராட்சியின் மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டத்தை ஆட்சியர் ஆ.அண்ணா துரை பார்வையிட்டு பாராட்டினார்.

 இதுகுறித்து பேரூராட்சி செயல் அலு வலர் மு.மணிமொழியன், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் ஆகியோர் தெரி வித்ததாவது, “உலகச் சுற்றுச்சூழல் தினத் தையொட்டியும், நீர் மேலாண்மை திட் டத்தின் கீழும் நடப்பட்ட ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளில், ஏறத்தாழ 70 சதவீதம் செழித்து வளர்ந்து உள்ளது. கால்நடைகள் கடித்து வீணாகியது, பட்டுப் போனது போன்றவை தவிர்த்து பெரும்பாலும் நன்றாக உள்ளது. இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் நகரே சோலை வனமாக மாறும் நிலை உள்ளது.  எதிர்காலத்தில் மழைவளம் சிறக்கவும், தூய்மையான காற்று கிடைக்கவும் மரம் வளர்ப்பு உதவியாக இருக்கும். பொது இடங்களில் உள்ள செடிகளை பாதுகாப்ப தில் பொதுமக்கள் அக்கறை காட்ட வேண் டும். மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புக ளை தங்கள் வீடுகள், வணிக வளாகங்க ளில் ஏற்படுத்த பொதுமக்கள் தாமாகவே முன்வர வேண்டும். எதிர்கால சந்ததியி னருக்கு தண்ணீரை நாம் விட்டுச் செல்ல வேண்டும்” என்றனர்.