tamilnadu

வளர்இளம் பருவத்தினருக்கு பயிற்சி முகாம்

குடவாசல், ஏப்.3-குடவாசல் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செஞ்சுருள் சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுசங்கம் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு, வளர்இளம் பருவத்தினருக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.கல்லூரி முதல்வர் து.ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட காசநோய் மைய அலுவலர் மரு.எம்.ஜெய்கணேஷ் கார்த்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட செஞ்சுருள் சங்க மேற்பார்வையாளர் எஸ்.விஜி பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானோரின் சங்கத்தின் தலைவர்சக்திவேல் கலந்து கொண்டார். திருவீழிமிழலை அரசு மருத்துவமனை எய்ட்ஸ் மைய ஆற்றுனர் சாந்தி, கவிமாறன், மணிகண்டன், மீனாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக முகாம் அலுவலர் வே.ரமேஷ்குமார் வரவேற்றார். நிறைவாக தமிழ்த்துறை விரிவுரையாளர் எஸ்.பிரபா நன்றி கூறினார்.