tamilnadu

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிக்கு கழிப்பறை வசதி

தஞ்சாவூர், ஏப்.3-கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஃபார்ச்சூன் பவுண்டேஷன் பிஜூ சந்திரன் மற்றும் மினிஸ்ட்ரோ பவுண்டேஷன் சாமுவேல் பிரபாகர், ஞானராஜ் ஆகியோர் நிதி உதவியில் பல்வேறு நிவாரண உதவிகள் செய்து தரப்பட்டன.இந்நிலையில், கஜா புயலால் சேதமடைந்த, ஊராட்சிஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் புதிதாக கழிப்பறை வசதி செய்து தர முடிவெடுத்து இரு கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்தன. இந்நிலையில் பணிகள் முடிவடைந்து மாணவர்கள் பயன்பாட்டிற்காக செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மினிஸ்ட்ரோ பவுண்டேஷன் நிறுவனர்கள் சாமுவேல் பிரபாகர், ஞானராஜ், நிர்வாகிகள் மணிகண்டன், கோகுல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கௌதமன், வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி,சுப்பிரமணியன், ஜோதி, ஆசிரியர் ரேணுகா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை ஆசிரியர்சித்ராதேவி வரவேற்றார். ஆசிரியர் ஹாஜா முகைதீன் நன்றிகூறினார்.