திருவாரூர்:நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொறுப்பிற்கு பேட்டியிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 14 வார்டுகளை கைப்பற்றியது. இதன் மூலம் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராகவும், துணைத் தலைவராகவும் திமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்வாகினர். சனிக்கிழமையன்று (ஜனவரி-11) நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தலையாமங்கலம் கோ.பாலசுப்ரமணியன் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வாகி பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக இளவங்கார்குடி சேகர் என்கின்ற ஆர்.கலியபெருமாள் தேர்வு செய்யப்பட்டார். இவர்களை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகளும், மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் ஊழியர்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும் பாராட்டினர்.