tamilnadu

img

மன்னார்குடி பட்டாசு கிடங்கில் தீ விபத்து

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் பாமணி ஆற்றங்கரைப் பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த பட்டாசு கிடங்கில் திருவிழாவுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் தயாரிப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இன்று காலையில் மிகப்பெரிய வெடி சத்தத்துடன் பட்டாசுக் கிடங்கு திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இந்த விபத்தில், பட்டாசுக் கிடங்கின் மொத்தப் பகுதியும் தரைமட்டமானது. கிடங்கில் பணியாற்றிக் கொண்டிருந்த சுரேஷ், பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு, வீரய்யன் ஆகிய ஆறு பேரும் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது குறித்து, தகவலறிந்து காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டாசு கிடங்கிற்கு முறையான உரிமம் உள்ளதா என்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா என்ற கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.