பாரிவேந்தரை ஆதரித்து பிரச்சாரம்
குளித்தலை, ஏப்.10 -திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஐ.ஜே.கே பாரிவேந்தரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலைஒன்றிய குழு சார்பில் செவ்வாயன்று ராஜேந்திரத்தில் தெருமுனை பிரச்சாரம் மு.க.சிவா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இலக்குவன், ராஜு, மாவட்ட குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பிரபாகரன், வடிவேல், கிளைச் செயலாளர்கள் சிவா, ராஜேந்திரன், ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குளித்தலையில் பிரச்சாரம்

மாணவர்களை பணி செய்ய வைத்த அதிகாரிகள்
கும்பகோணம், ஏப்.10-தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிறிய மலர்மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை நாடாளுமன்றதொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர் பயன்படுத்துவதற்காக மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங் களை தேர்தல் அதிகாரிகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணிகளுக்கு வந்திருந்த தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணியாளர்கள் அமர்வதற்கு நாற்காலி, வாக்குஇயந்திரங்களை வைப்பதற்கு டேபிள்கள் மற்றும் உபயோகப் பொருட்களை ஒழுங்குபடுத்தும் பணிக்கு,முழு ஆண்டு தேர்வுக்கு வந்தஅப்பள்ளி மாணவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.