தரங்கம்பாடி : நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் புதனன்று நடைபெற்றது. சிஐடியு பொன் விழா ஆண்டு மற்றும் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி பிறந்த நாளையொட்டி நடைபெற்ற முகாமில், மன்ற மாவட்ட அமைப்பா ளர் சந்திரன், மயிலாடுதுறை நகர தலைவர் விஜய், ஒன்றிய தலைவர் ராஜேஷ், குத்தாலம் ஒன்றிய செயலாளர் வேதா ஆனஸ்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் ரத்த தானம் வழங்கினர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் டி.துரைக்கண்ணு, மாவட்ட பொருளாளர் ஆர்.ரவீந்திரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி னர். முகாமில் அன்பு, கார்த்தி, விஜயபிரபாகரன், பரணிதரன், வினோத், மதீஸ், மணி, ராகவன், அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 41 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.