tamilnadu

img

மண்டலப் பயிற்சி முகாம்

திருச்சிராப்பள்ளி, மே 12-தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகா ப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புறநகர் மாவட்டக்குழு சார்பில் மண்டல பயிற்சி முகாம் திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் இர ண்டாம் நாளான ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற முகாமிற்கு சங்க புறநகர் மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், திருவெறும்பூர் தாலுகா செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள், நலத்திட்டங்கள் என்ன? என்ற தலைப்பில் சங்க மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசினார். முன்னதாக புறநகர் மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார். பொருளா ளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.