tamilnadu

பேச்சுப் போட்டி: திருச்சி சிறுவன் உலக சாதனை

 திருச்சிராப்பள்ளி, நவ.4- திருச்சி ஆல்பா கேம் பிரிட்ஜ் இன்டெர்நேஷ்னல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சஜூவா என்ற சிறுவனின் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது.  இதில் முதலாவதாக 40 வினாடிகளில் 5 கணக்கு களை முடித்து உலக சாத னையும், தொடர்ந்து இரண்டாவதாக உலக தலை வர்களான பிடல் காஸ்ட்ரோ, சாக்ரடீஸ் மற்றும் விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன், திருவள்ளுவர், தந்தை பெரியார் ஆகியோ ரை பற்றி 4 நிமிடம் 36 வினாடி களில் தமிழிலும், ஆங்கிலத்தி லும் பேசி உலக சாதனை நிகழ்த்தி உள்ளார்.  இவரது சாதனைகள் நடுவர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப் பட்டு ஆய்வு செய்து உலக சாதனையாக அறிவிக்கப் பட்டு ஜெட்லீ புக் ஆப் வேர்ல்டு  ரெகார்ட் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. சிறுவனின் பெற்றோர் அருண், ஜான்சி ராணி மற்றும் கராத்தே மாஸ்டர் டிராகன் ஜெட்லீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.