ஆடவர் 400 மீ தடை தாண்டுதல் பிரிவு செவ்வாயன்று காலை (இந்திய நேரப்படி) நடைபெற்றது. மொத்தம் 8 வீரர்கள் களமிறங்கிய இந்த பிரிவில் நார்வே வீரர் வார்ஹோல்ம் கார்ஸ்டென் 46.70 வினாடிகளில் 400 மீட்டரை தடைகள் மூலம் கடந்து உலக சாதனைபடைத்தார். இதற்கு முன் கடந்த வருடம் கத்தார் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 47.42 வினாடிகளில் கடந்தே உலக சாதனையாக இருந்தது. இந்த சாத னையை படைத்த கார்ஸ்ஸ்டென் டோக்கியோ ஒலிம்பிக்கில் தானே முறியடித்துக் கொண்டார்.