நாமக்கல்லில் 2 நிமிடத்தில் 60 விதமான குரல்களை எழுப்பி 2 வயது குழந்தை உலக சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பி.குமாரபாளையம் அருகே சடையாம்பாளையத்தைச் சேர்ந்த பெரியநாயகம்-எலிசபெத் தம்பதியரின் குழந்தை தெல்பியா(வயது 2). இந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 விதமான குரல்களை எழுப்பி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதாரண கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் கூறுகையில், எங்களது குழந்தை தெல்பியா பிறந்தது முதல் சுறுசுறுப்பாக இருப்பாள். சில மாதங்களிலேயே அவளிடம் அபூர்வ திறமை இருப்பதை உணர்ந்தோம். நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அவள் இப்போது கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்காலத்தில் கின்னஸ் சாதனை படைக்க செய்வதே எங்களது நோக்கம் என தெரிவித்தனர்.