tamilnadu

img

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் செந்தில்பாலாஜி பேச்சு

கரூர், ஏப்.29-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள மண்மாரி, ஷா நகர் மேற்கு, கிழக்கு, புளியமரத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் வாக்கு கேட்டு பேசுகையில், 2016 இல் இதே தொகுதியில் மக்களாகிய நீங்கள் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தீர்கள்.எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதற்கு நான் சட்டமன்றத்தில் வாக்களித்தேன். பின்னர் அரசியல் பழிவாங்கும் நோக்கில் என் பதவியை பறித்து விட்டனர். இரண்டு ஆண்டுகள் இந்த தொகுதியில் எம்எல்ஏ இல்லாமல் காலியாக உள்ளது. என்னுடைய எம்எல்ஏ பதவியை பறிக்கும் அளவிற்கு நான் என்ன பாவம் செய்தேன். மே 23 ஆம் தேதி மதியத்திற்கு மேல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.