திருச்சிராப்பள்ளி, ஜூன் 26- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சிங்கர்கோவில் அருகில் உள்ள சங்கர் தோப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர்(பொ) சிவபாலனிடம் புத னன்று மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாக்கடையில் தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இத னால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவில் கொசுக்கடி தொல்லை ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் மற்றும் அரிப்பால் அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாக்கடை மிகவும் ஆழமானது. திறந்தே கிடப்பதால் இதற்குள் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடுகள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கா மல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாக்க டைக்கு மூடி போட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை சிபிஎம் கீழஅடையவளஞ்சான் கிளைச்செய லாளர் மாணிக்கம், உதவி ஆணையரிடம் வழங்கினர். அப்போது பகுதிக்குழு உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.