திருச்சிராப்பள்ளி, மார்ச் 1- திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய நந்தினி தலைமையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணை யர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன், சத்தி ரம் பேருந்து நிலையம், சோமரசம் ட்டை உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்க ளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வணிக நிறுவனங்களில் பணிக்கு அமர்ததப்பட்டு இருந்த குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் 8 பேரை மீட்டு விசாரித்தனர். இதில் அவர்கள் அனைவரும் குடும்ப வறுமை காரணமாக மெக்கானிக் பட்டறை, பேக்கரி, புத்தக கடை உள் ளிட்ட இடங்களில் வேலை செய்தது தெரியவந்தது. மீட்கப்பட்ட 8 பேரும் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்ப டைக்கப்பட்டனர். இது போல் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி னால் கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறையினர் தெரி வித்துள்ளார்.