திருச்சிராப்பள்ளி:
11 ஆவது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, சோழமண்டல இலக்கிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவகுருநாதன், திருக்குறள் கல்வி மைய தலைவர் முருகானந்தம், கம்பன் கழக செயலாளர் மாது, குமரவேல் (வானம்) சேதுராமன் (களம்) நடராசன் (சமூக சிந்தனை மேடை), இளஞ்சேட்சென்னி (லால்குடி அறம் தமிழ் வளர்ச்சி பேரவை) ரங்கராசன் (தமுஎகச ) சாகுல் அமீது (சத்திய சோலை) முகமது ஜாபர், ஜெகநாதன், ஷ்யாம் சுந்தர் (டைட்ஸ் ) மற்றும் பல்வேறு அமைப்பினர் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இப்போது மீண்டும் தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இம்முறை மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடந்த விருப்பம் தெரிவித்துள்ளன. அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்களை பெற்று தமிழக அரசிடம் ஒப்படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.