தஞ்சாவூர் ஜூன்.20- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் பூங்கோதை தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்க மாவட்டத் தலைவர் பஹாத் அகமது, துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் குமரேசன், சேது பாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஜலீல் முஹைதீன், நகரத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மாற்றுத்திற னாளிகள் வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்படும். இதனைச் செய்ய ஒப்பந்ததாரர் தவறும் பட்சத்தில், அவரது உரிமம் ரத்து செய்யப்படும். அரசு மற்றும் தனியார் கட்ட டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கைப்பிடி வசதியுடன், சாய்தள அமைப்பு ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.