திருச்சிராப்பள்ளி, ஜூன் 20- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மணிகண்டம் ஒன்றிய மாநாடு புதன்கிழமை இனாம்குளத்தூ ரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஆயிஷாமரியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கீதா, மாவட்ட செய லாளர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் (பொ) திலகவதி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநாட்டில், வங்கிகளில் இருந்து பெறப்பட்ட சுயஉதவிக்குழு பெண் களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச வீட்டுமனை மற்றும் குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தலைவராக லில்லி, செய லாளராக ஆயிஷாமரியம், பொருளா ளராக ஆயிஷாபீவி, துணைத்தலை வர்களாக ஜெயலெட்சுமி, பழனி யம்மாள், துணை செயலாளராக மீனாட்சி, ஜெபஸ்டின்ப்ரியா உள்பட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் நஜ்மா, புவனேஸ்வரி, நிர்மலா, வள்ளி, கவிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆயிஷாபீவி நன்றி கூறினார்.