tamilnadu

img

பொற்பனைக்கோட்டை சாலையை செப்பனிடக் கோரிக்கை

புதுக்கோட்டை, ஏப்.26- புதுக்கோட்டையி லிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பொற்பனைக்கோட்டை. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட மிகப் பழமையான கோட்டை இது. அப்பொழுதே இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் இப்பகுதியில் உள்ளன. இத்தகைய புகழ்வாய்ந்த இந்த கோட்டையில் அகழாய்வு நடத்த மத்திய, மாநில தொல்லியல் துறைகள் முன்வர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், இங்குள்ள முனீஸ்வரர் கோவில் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலுக்கு எந்தவித பேருந்து வசதிகளும் கிடையாது. சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக மணிப்பள்ளம் சாலை விலக்கிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. தெரு விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் செல்வோம் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, மேற்படி சாலையை செப்பனிட்டு புதிய தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.