சீர்காழி, ஜூன் 18- கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயகநல்லூரில் குறைந்த மின் அழுத்தத்தைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயகநல்லூர் கிராமத்தில் உள்ள 170 வீடுகளில் 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இந்த கிராமத்திலேயே மின் சார வாரிய அலுவலகம் இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருந்து வருகி றது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி கொள்ளிடம் அருகே தண் டேசநல்லூரில் உள்ள மின்வாரிய அலு வலக உதவி பொறியாளரிடம் கோரி க்கை அளித்தனர். பின்னர் மின்சார வாரியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து உதவி பொறியாளர் இளையராஜா கூறுகையில், கடைக் கண் விநாயகநல்லூரில் உள்ள மின் மாற்றி மூலம் 100 கேவி ஆர்ம்ஸ் அளவு உள்ள குறைந்த மின்னழுத்த மின்சா ரமே வழங்கப்படுகிறது. அங்கு 250 கிலோ வாட் ஆர்ம்ஸ் சக்தியுள்ள மின்சா ரம் வழங்குவதற்கு மின்சார வாரியம் மூலம் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 140 ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு மாதமே ஆகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய 250 கே.வி ஆர்ம்ஸ் சக்தியுள்ள மின்சாரம் வழங்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.