tamilnadu

img

ஒரே மேடையில் பேச தயாரா?

பெரம்பலூர், ஏப்.7-திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பெரம்பலூரில் சனிக்கிழமையன்று பிரச்சாரம் செய்தார். இதில் வேல்முருகன் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களுக்கு துரோகத்தை தான் செய்துள்ளது. தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடியை மக்கள் ஆட்சி கட்டிலிருந்து தூக்கி எறிய வேண்டும். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் துரோகம் செய்தது மத்தியஅரசு தான். அதே போல் மத்திய அரசிற்குகாவடி தூக்கி கொண்டு மாநில உரிமையை பறிகொடுத்து வரும் எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் இந்த தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும். பாமகநிறுவனர் ராமதாசிற்கு நானும், காடுவெட்டி குருவும் இரு கண்கள் போல்இருந்து செயல்பட்டு பாமக கட்சியைகாப்பாற்றினோம். பின்னர் நான் முதலில் கட்சியிலிருந்து தூக்கியெறிப்பட் டேன். குருவும் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். இதே போல் தான் பாமககட்சியை துவக்கிய காலத்திலிருந்த அனைத்து தலைவர்களும் கட்சியை விட்டு தூக்கியெறிப்பட்டனர். தற்போது ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, அவரது தாயார் என பாமக கட்சி அவர்களது குடும்ப சொத்தாகி விட்டது.


பல கோடிக்கணக்கான வன்னியர் சங்க சொத்துக்கள் எல்லாவற்றையும் ராமதாஸ் தனது குடும்பத்தினர் பெயரில் எழுதிக் கொண்டு அனுபவித்து வருகின்றனர். வன்னியர் சமூக மக்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்துவரும் ராமதாஸ் அச்சமுதாய மக்களைஏமாற்றி வருகிறார். வன்னியர்களுக்காகவே வாழ்ந்து வருவதாக கூறும் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வன்னியர் மக்களுக்கு செய்தது என்ன? என்பது குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க, பேசதயாரா? என சவால் விடுகிறேன். வந்துபேசட்டும். அப்போது தெரியும் ராமதாசின் வண்டவாளம் தண்டவாளத்தில் செல்வது. 10 ஆயிரம் கோடி செலவில்சேலம் 8 வழிச்சாலைப் பணிக்கு டெண் டர் விட்டு 4 ஆயிரம் கோடி கமிஷன் எடப்பாடி பெற்றுக் கொண்டார். அந்த சாலைப் பணிக்கு ஐகோர்ட் மூலம் தடை பெற்றவர் அன்புமணி ராமதாஸ். இப்போது எவ்வளவு கமிஷன் பெற்றுக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.பாரதிய ஜனதா கட்சியையும், அதிமுக ஆட்சியையும் எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியவர்கள் தான் இந்த ராமதாஸ், அன்புமணியும். ஆனால் தற்போது பெட்டியை வாங்கிக் கொண்டு மத்திய,மாநில அரசுகளை புகழ்பாடுவதை மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள். வன்னியர் சமுதாய மக்களுக்காக நலவாரியம் அமைத்தது திமுக ஆட்சியில் தான். இவ்வாறு வேல்முருகன் பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ் தமிழ்செல் வன், சிபிஎம் என்.செல்லதுரை, சிபிஐவீ.ஞானசேகரன், விசிக தமிழ் மாணிக் கம், கிட்டு, ஐஜேகே மாநில தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் ஜெயசீலன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.