கரூர், ஏப்.11-திருச்சியில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் செல்லும் வழியில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் தி.க.சார்பில் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் வியாழக்கிழமை தி.க.தலைவர் கி.வீரமணிக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தின் எல்லா இடங்களிலும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. மக்கள் உணர்வானது இரண்டு ஆட்சிகளும் வீழ்த்தப்பட வேண்டும். வீட்டுக்குஅனுப்பப்பட வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறது.அதிலும் குறிப்பாக 8 வழிச்சாலைக்கு எதிராக உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பு வெளியானதால் முன்னர் அல்லல்பட்டவர்கள், இப்போது ஆனந்த கண்ணீர் விடக்கூடிய நிலைக்கு வந்துள்ளார்கள். இதற்கு காரணமானவர்களின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நிலையை அவர்கள் எடுத்துள்ளார்கள். மேலும் ரபேல் ஊழல் பற்றி அதற்கான ஆவணங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வைத்த நேரத்தில் அது திருடப் பட்ட ஆவணம் என்றெல்லாம் சொல்லி,அதை ஏற்கக் கூடாது எனக் கூறிய நேரத்தில் உச்சநீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து, விசாரணையை தொடர்ந்திடச் செய்ததுமோடி அரசுக்கு பெரிய அளவில் பின்னடைவு மட்டுமல்ல, படுதோல்வியாகும். எனவே தான் இப்போது மத்திய, மாநில அரசுகள் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.ஊழல்களின் உருவங்களாக இந்த ஆட்சிகள் இருக்கின்றன. புல்வாமாதாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ராணுவத்தை மோடியின் சேனை எனக் கூறுவதை தேர்தல் ஆணையமே தவறு என சுட்டிக் காட்டியுள்ளது. கடைசியில் தங்களது தோல்வியை உறுதிசெய்து கொண்ட பின் எங்களைப் போன்றவர்களின் பிரச்சாரக் கூட்டத்திற்கு தடை விதிப்பது, பெரியார் சிலையை உடைப்பது,அனுமதி வாங்கி நடத்தும் கூட்டத்தில் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள். இதனால் கடைசி நேரத்தில் ஏதாவது ரகளை செய்து தேர்தலை நிறுத்தலாமா, பத்திரிகைகாரர்களை மிரட்டலாமா என்ற நிலைக்கு வந்து விட்டனர்.பாஜக தேர்தல் அறிக்கையில் மோடியின் பெயர் 32 முறை வந்திருக்கிறதே தவிர, அதில் ஒன்றுமில்லை. பணத்தாலோ, கலவரத்தாலோ அல் லது பத்திரிகைகாரர்களின் கழுத்தை நெரிப்பதாலோ, திட்டமிட்ட போலி கருத்துக் கணிப்புகளாலோ வெற்றி பெற முடியாது. நாடு முழுவதும் மோடிக்கு எதிராக அலை உள்ளது. தென்னிந்தியாவிலும் பாஜக காலூன்றமுடியாது. இவ்வாறு கி.வீரமணி கூறினார்.