tamilnadu

img

விவசாயிகள் விரோத மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.14- விவசாயிகள் விரோத மத்திய பட்ஜெட்டை கண்டித்தும் உரம், நகைக் கடன், உணவு மற்றும் பொதுவினி யோக மானியங்கள், கிராமப்புற வேலை உறுதி திட்டம் ஆகியவற்றிற்கான நிதியை குறைக்க கூடாது. இலந்தை, வாத்தலை வடிகால் வாய்க்காலை தூர்வாரி கொசு மற்றும் சுகாதார கேடுக ளிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஒப்பந்தப்படி புதுஅய்யன் வாய்க் காலை சர்வே செய்து ஆக்கிரமிப்பு களை அகற்றி தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று திருப்பராய்த்துறை கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வி.ச. மாவட்ட துணைத் தலைவர் பிரகாச மூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணைத் தலைவர் முகமதலி, மாவட்டச் செயலாளர் கே.சி. பாண்டியன், மாவட்டத் தலைவர் சங்கிலி முத்து, விதொச மாவட்டத் தலைவர் செல்வராஜ், அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், சிபிஎம் அந்த நல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத் மணி ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் தனபால், துணைத் தலைவர் சிவக்குமார், துணை செயலா ளர் முருகானந்தம், துணை செயலாளர்  ராமு, நடராசன், காந்தி, ராதா கிருஷ்ணன், ராசையன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.