திருச்சிராப்பள்ளி, ஜூலை 27- திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவ மனை மற்றும் ரயில்வே பணிமனையில் பணி புரியும் ஊழியர்களுக்கு கொரோனா பாது காப்பு உடைகள் வழங்க வேண்டும். பொன்மலை ரயில்வே மருத்துவமனை யிலேயே கொரோனா நோய்க்கான சிகிச்சை அளிக்க வேண்டும். 50 சதவீதம் தொழிலாளர்க ளுடன் பணிமனையை இயக்கிட ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும். 55 வயதுடையவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தை உள்ள வர்களுக்கு வேலையிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன் சார்பில் செவ்வாயன்று பொன்மலை ஆர்மரிகேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க கோட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி உதவி பொதுச்செயலாளர்கள் மனோ கரன், சந்தானசெல்வம், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர்.