tamilnadu

காவல்துறை உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை: குற்றவாளிகளை கைது செய்க!

1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜன.10- தமிழக எல்லை குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் தொடர்புடைய குற்ற வாளிகளை கண்டுபிடித்து உடனடி யாக கைது செய்யவும், பாதிக்கப் பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாள ரின் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கேரள - தமிழக எல்லையான களியக்காவிளையில் தேசிய நெடுஞ்சாலைக்கு தெற்கு பக்கமாக சந்தையை ஒட்டி தமிழக பகுதியில் ஒரு செக் போஸ்ட் உள்ளது. களி யக்காவிளை ஜூம்மா பள்ளியின் பின்பக்கம் கேட் பக்கம் அமைந் துள்ள இந்த செக்போஸ்டில் சிறப்பு  உதவி ஆய்வாளர் வில்சன் வேலை யில் இருந்தபோது இரண்டு நபர்கள் உதவி ஆய்வாளரை தங்கள் கையிலிருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நிலைகுலைந்து போன உதவி ஆய்வாளர் வீழ்ந்த தும் வந்த இருவரும் பக்கத்திலுள்ள பள்ளிவாசலின் உள்ளே புகுந்து தேசிய பாதையில் உள்ள கேட் வழி யாக வெளியே சென்று பாறசாலை நோக்கி ஓடி மறைந்துள்ளனர். உதவி ஆய்வாளரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் உதவி ஆய்வாளர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக கூறினர். உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. 

சம்பவம் கேள்விப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, வட்டார செயலாளர் வீ.அனந்த சேகர், களியக்காவிளை பத்மநாப பிள்ளை, கேரள மாநிலம் பாறசாலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ஹரிந்திரன், பாறசாலை கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வியாழனன்று காலை 9 மணியள வில் சம்பவ இடம் சென்று பார்வை யிட்டு விசாரித்தனர்.  இதுகுறித்து சட்டப்படி நியாய மான, நேர்மையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும் காவல் துறையையும் மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகிறது.   இவ்வாறு அவர் தெரிவித்தார்.