திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் மாந்துறை நகர் ரோடு பகுதியில் கோயில் நிலங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் பொது மக்களை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். குடியிருப்புகளுக்கு வணிக வளாகங்களை போல் வாடகை நிர்ணயம் செய்வதை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் நகர் கிளை சார்பில் மாந்துறை சிவன் கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் மனோகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட செயலாளர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் பாலா, பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் சீத்தாராமன், தாவிச ஒன்றிய தலைவர் பாலு, ஒன்றிய தலைவர் விசாலாட்சி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பேசினர். பாபு, குணசேகரன், சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.