திருச்சிராப்பள்ளி, ஜூலை 22- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டத் தலை வர் ராமர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று சிஐடியு மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்ட செயலாளர் சேகர் தலை மையில் நடைபெற்றது. சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக மாட்டு வண்டி மணல் குவாரி மூடப்பட்டதால் சுமார் 2000 தொழிலாளர்கள் வேலையிழந்து பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். வண்டி மாடுகள் உணவு இல்லாமல் இறக்கும் நிலை தொடர்கிறது.
கட்டுமான, விவசாய பணி கள் மணல் தட்டுப்பாட்டால் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முறையான அனுமதி யும் பெற்று தயார் நிலையில் கொள்ளிடம் ஆற்றில் கிளியநல்லூர், மாதவபெருமாள், தாளக்குடி, கூகூர் ஆகிய மணல் மாட்டு வண்டி குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரி ஜூலை 27 அன்று திருச்சி பொதுப்ப ணித்துறை அலுவலகம் முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்தோடு காந்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.