நாகப்பட்டினம், நவ.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தினம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கம் மலர்ந்து 100-வது நாள் ஆகியவற்றை முன்னிட்டு, கொடியேற்று நிகழ்ச்சிகள் நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை எழுச்சியோடு நடைபெற்றன. கட்சி நாகை மாவட்டக் குழு அலு வலகமான ‘வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்தில் சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். சி.பி.எம். மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ப.சுபாஷ்சந்திர போஸ், நாகை நகரப் பொறுப்புச் செயலாளர் சு.மணி, பி.பாலசுப்பிர மனியன், ஜி.ராஜேஸ்வரி, கா.காந்தி நேசன், வி.ராமலிங்கம், ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் ரயில்வே நிலைய வளாகத்தில் தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம்-சி.ஐ.டி.யு. சார்பில் சங்கக் கொடியை சங்கத்தின் நாகைக் கிளைச் செயலாளர் தனபால் ஏற்றி வைத்தார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா, சி.பி.எம்., மாவட்டக்குழு உறுப்பினர் எம். பெரியசாமி, சி.பி.எம். நாகை நகரப் பொறுப்புச் செயலாளர் சு.மணி, சொ. கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.குணசேக ரன், வெங்கடேஷ் பங்கேற்றனர். வேதாரணியம் வட்டம் தாணிக் கோட்டகத்தில் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து கிராமக் கூட்டம் நடை பெற்றது. பி.எஸ்.பன்னீர்செல்வம், இளையபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.