tamilnadu

img

ரத்ததான முகாம்

தரங்கம்பாடி, ஜூன் 14- உலக ரத்ததான நாளை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறைஅழகுஜோதிஅகாடமி சிபிஎஸ்சி பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைவர் கண்ணன்,தாளாளர் சிவக்குமார்,கல்விப்புல இயக்குனர் கவிதாகண்ணன்,பள்ளிமுதல்வர் நோயல்மணி, துணை முதல்வர் அமுதா, அப்பாஸ் அலிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாயூரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் இராம.சேயோன் முகாமைதொடங்கி வைத்தார். மயிலாடுதுறைஅரசு மருத்துவமனை ரத்தவங்கி அதிகாரி சிவக்குமார் பேசினார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற முகாமில் பெற்றோர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைஅழகு ஜோதிஅகாடமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.