tamilnadu

img

தாழ்வான மின்கம்பிகள், சேதமான மேற்கூரை உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் இயங்கும் அரையப்பட்டி அங்கன்வாடி

புதுக்கோட்டை, மே 18-ஆலங்குடி அடுத்த அரையப்பட்டி அங்கன்வாடி மையம் மிகவும் ஆபத்தானநிலையிலும், அடிப்படை வசதிகள் இன்றியும் இருப்பதால் குழந்தைகளை மையத்தில் சேர்க்க பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டி ஊராட்சி கீழஅரைப்பட்டியில் அரசு அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேல்பகுதியில் மிகவும் தாழ்வாக கட்டிடத்தை உரசுவது போல மின்கம்பிகள் செல்வதால் கட்டிடம் முழுவதும் மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளது. இதனைச் சரிசெய்ய மின்வாரியத்தில் மக்கள் பலமுறைமுறையிட்டும் சரி செய்யவில்லை. மேலும், அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து எந்த நேரமும் விழுந்து விடும் ஆபத்தும் உள்ளது. நீர்த்தேக்கத் தொட்டி பயன்படுத்த முடியாத அளவுக்குமுற்றிலும் பழுதடைந்துள்ளது. சமையல் கூடம் மற்றும்கழிப்பறைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. தற்பொழுது உள்ள நிலையிலேயே அங்கன்வாடி மையம்தொடர்ந்தால் குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடும், தண்ணீர் பிரச்சனை உள்ளிட்டபல்வேறு தொந்தவுகளும் ஏற்படும். இன்னும் சில நாளில் கோடை விடுமுறை முடிந்து அங்கன்வாடி மையம் செயல்பட உள்ளது. இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு அப்பகுதியினர் தயக்கம் கட்டி வருகின்றனர். எனவே, மின்கம்பிகளை மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி கட்டிடம், குடிநீர், கழிவறை, சமையல் கூடங்களை உடனடியாக மராமத்து செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.