tamilnadu

img

தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியை புறக்கணிப்போம்!

தஞ்சை கருத்தரங்கில் அழைப்பு

தஞ்சாவூர், ஜன.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தையொட்டி, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), குடிமக்கள் தேசிய பதி வேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) விளக்கக் கருத்தரங்கம் வியா ழக்கிழமை, தஞ்சையில் நடை பெற்றது.  கருத்தரங்கிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செய லாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் பேசு கையில், “நாட்டில் மக்கள் ஒற்று மையை சீர்குலைக்கும் வகை யில், குறிப்பாக சிறுபான்மை மக்க ளுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை திசை திருப்பும் வகை யிலும், சிறுபான்மையினருக்கு எதிராக விஷம் கக்கும் வகையி லும், பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரி வார அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  இந்திய விடுதலைக்காக சாதி, மதம் கடந்து பலரும் போரா டினர். ஜவகர்லால் நேரு பல்க லைக்கழகம், ஜாமியா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்க லைக்கழக, கல்லூரி மாணவர்கள் என்று அரசுக்கு எதிராக சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை எதிர்த்து வீரமிக்க போராட்டங் களை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் மக்கள் திரண்டு எழுந்து பாஜக அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். 

பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடும் ஜனநாயக சக்திகள் கடுமையாக அச்சுறுத்தப் படு கின்றனர். பிற்போக்கு சக்திகள் கும்பலாகத் திரண்டு ஜனநாயக சக்திகளை மிரட்டும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நாம் அனைவரும் ஒன்றி ணைந்து எதிர்க்க வேண்டும். ஜன வரி 26 குடியரசுத் தினத்தன்று, “அரசியல் சாசன பாதுகாப்பு தின மாக”வும், ஜனவரி 30 காந்தி நினைவு நாளில், “மனிதச்சங்கிலி, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி கள்” நடைபெற உள்ளன” என் றார். இக்கருத்தரங்கில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செய லாளர் சாமி.நடராஜன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், பி.செந்தில் குமார், கே.அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சரவணன், இரா.புண்ணியமூர்த்தி, என்.சிவ குரு, எஸ்.ராஜன், ஜி.அரவிந்த சாமி, மாநகரக் குழு உறுப்பினர் கள் சி.ராஜன், எம்.வடிவேலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், அருட்தந்தை சூசைபால், கிறிஸ்தவ நல் லெண்ண இயக்கம் ஜஸ்டின், பிரான்சிஸ், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந் திரன், சிறுபான்மை பிரிவு செய லாளர் காலித், விசிறி சாமியார் முருகன், ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன், உலமாக்கள் சபைத் தலைவர் ஹாஜா மைதீன், தமு எகச மாவட்டச் செயலாளர் விஜய குமார் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.  நிறைவாக, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாந கரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் நன்றி கூறினார். முன்னதாக கவி ஞர் வல்லம் தாஜ்பால் கவிதை வாசித்தார்.