கருத்து வேறுபாட்டால் கணவன்-மனைவி தற்கொலை
கும்பகோணம், ஏப்.24-தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் குட்டியானை தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(36). இவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருணா, குழந்தை நரேஷ்மதன். இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. புதனன்று காலை இத்தம்பதியின் இரண்டரை வயது குழந்தை நரேஷ்மதனின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அப்போது பாலமுருகன் வீட்டின் ஜன்னலில் தூக்கு மாட்டி கொண்டதும் அருகில் அவரது மனைவி அருணா பூச்சி மருந்து சாப்பிட்டு இறந்த நிலையிலும் கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் உடல்களைக் கைப்பற்றிகும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தல்
கும்பகோணம், ஏப்.24-தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கம்திருவிடைமருதூர் வட்ட கிளை கூட்டம் திருவிடைமருதூரில் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு அரங்கத்தில் வட்டத்தலைவர் சிவராமன் தலைமையில் நடைபெற்றது.வட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.வட்டச் செயலாளர் மூர்த்தி வேலை அறிக்கையையும், பொருளாளர் சிவசண்முகம் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். இந்தியாவில் கல்வி தற்போது பொதுப் பட்டியலில் உள்ளது. இது மாநிலங்கள் தங்கள் தாய்மொழி வழி கல்வியை நடைமுறைப்படுத்த தடையாக உள்ளது. எனவே கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய்மொழிவழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி கல்வித்திறன் மேம்பட வழிவகை செய்ய வேண்டும். வட்டக் கிளை மாநாட்டை மே 30-ம் தேதி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ராஜகோபாலன், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னதுரை நன்றி கூறினார்.
போலீசாரின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கல்
திருச்சிராப்பள்ளி, ஏப்.24-பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும்திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.அதேபோல் இந்த ஆண்டும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த காவலர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் ஆணையர் அமல்ராஜ் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குரூ.2000, 2500, 3500, 4500, 5500, 6500 மற்றும் 7500 எனமொத்தம் 20 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.இதில் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் நிஷா மற்றும்காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.