நாகர்கோவில், மே 18-கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (96). இவர் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னைஇணைத்து கொண்டு செயல்பட்டவர். சுதந்திர போராட்டத்திலும், குமரி மாவட்டம்தாய் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்திலும் முன்நின்று போராடியவர். கட்சியின் நாகர்கோவில் செயலாளராகவும், நகரசுத்தி தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், பல்வேறு தொழிற்சங்க பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர். இவர் வெள்ளியன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ஏற்கனவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து,கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், எம்.அண்ணாதுரை, எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் மலைவிளை பாசி உள்ளிட்டோர் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர். அவரது மரணச்செய்தி அறிந்ததும், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு ஞாயிறன்று மாலை 3.30 மணிக்கு வடக்கு தாமரை குளத்தில் நடைபெறுகிறது.