tamilnadu

img

ஐபிஎல் லீக் போட்டிகள் அகன்ற திரையில் ஒளிபரப்பு

கோவை, மே 3-கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பிசிசிஐ பேன்பார்க் ஒருங்கிணைப்பாளர் இர்பான் தாதன் மற்றும் கோவைமாவட்ட கிரிகெட் சங்க நடுவர் கமிட்டி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நடைபெற்று வரும்12வது ஐ.பி.எல் தொடரின் லீக் சுற்றின் இறுதி ஆட்டங்கள் வரும் 4 மற்றும் 5 ம் தேதிகளில் நடைபெற உள்ளது.இதனை கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் கோவை கொடிசியா மைதானத்தில் அகன்ற திரை ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மாலை 4 மணி மற்றும் 8 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஐபிஎல் தொடருக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து பிசிசிஐ இந்த பேன்பார்கை 36 மாநகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 65 மாநிலங்களில் பேன் பார்க் சென்றடைந்துள்ளது. இந்த ஆண்டு புதிதாகதேஸ்பூர், காங்தாக், பிலாய், உனா, ஷிமோகா, திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலும் பான் பார்க் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.