tamilnadu

img

வைகை அணையில் படகு சவாரி அறிமுகம்

தேனி, மே 17- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.  தற்போது கோடைகால பள்ளி விடுமுறையை முன்னிட்டுவைகை அணையில் தினமும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு படகு சவாரி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வைகை அணையில் சிறுவர் பூங்கா, ரயில் வண்டி,யானை சறுக்கல், ஊஞ்சல் போன்றவைகள் சிறுவர்களைகவர்ந்து, அவர்கள் விளையாடி வந்தனர். இந்நிலையில்  படகு சவாரி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறுவர் முதல்பெரியவர் வரை ஆர்வமுடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.20 நிமிடங்கள் படகு சவாரிக்கு 2 நபருக்கு 90 ரூபாய்,நான்கு நபர்களுக்கு 120 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் மூணாறு பகுதிக்கு அடுத்து வைகை அணையில் படகுசவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.ஆனால் உள்ளூர் தேனி மாவட்ட நடுத்தர வர்க்க சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி கட்டணம் அதிகமாக இருப்பதால் படகுசவாரி செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் கட்டணம் மிக அதிகம் என்றும் ஆண்டிபட்டி உள்ளிட்ட தேனி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் குறை கூறி வருகின்றனர்.படகு சவாரி கட்டணம் சற்று குறைவாக இருந்தால்இன்னும் அதிகமான நேரம் படகு சவாரி செய்வோம்என்றும் படகுசவாரி கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கையை தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வைகை அணையை நிர்வகிக்கும் பொதுப்பணித்துறையும் எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலாப்பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.