tamilnadu

img

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கொடியேற்று விழா

தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட் டையில் காப்பீட்டுக் கழக ஊழியர் தஞ்சை கோட்ட சங்க 59 ஆவது உதய தின கொடியேற்று விழா மற்றும் வாயிற் கூட்டம் வெள்ளிக்கிழமை எல்ஐசி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவர் வி.எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். லிகாய் முகவர் சங்க மாநில செயல் தலைவர் ஏ.பூவலிங்கம், லியாபி சங்கம் தர்மசீலன், முதன்மை அதிகாரிகள் சங்கம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  தஞ்சை கோட்ட சங்க இணைச் செயலாளர் இரா.விஜயகுமார் சங்க வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். கிளைப் பிரதிநிதி நீலாயதாட்சி, மூத்த உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளைச் செயலாளர் கே.சம்பத் நன்றி கூறினார். தொடர்ந்து ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்திட உறுதி மொழி ஏற்கப்பட்டது.