tamilnadu

img

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மே 10-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் உய ர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி சேது சாலை வி.எஸ்.கே.விழா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி குறித்த நிகழ்ச்சிக்கு அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் சி.கஜானா தேவி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வீர.சந்திரசேகரன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கே.ஜி.புவனேசுவரி முன்னிலை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் பேசினார். கல்வி வழிகாட்டி ஆலோசக ரும், மூத்த பத்திரிகையாளருமான பொன்.தனசேகரன் சிறப்புரையாற்றினார். நிறைவாக ஆசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் டி.இதயராஜா, ச.தமிழ்செல்வன், எஸ்.செந்தில்குமார், ஆசிரியர் சற்குணம், ஓய்வுபெற்ற ஆசிரியர் புலவர் சு.போசு, பாவலர் தங்கவேலனார், இசையமைப்பாளர் பாலா, வர்த்தக கழகப் பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி கலந்து கொண்டனர்.